ADDED : செப் 16, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி கோடநாடு காட்சி முனைக்கு, சாதாரண நாட்களில் கூட, நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள காட்சிமுனை கோபுரம் அருகே, மின்கம்பம் பொருத்தப்பட்டுள்ளது. மின் கம்பத்தில் தாழ்வாக திறந்த நிலையில், சிறுவர்கள் தொட்டுவிடும் உயரத்தில் மின் பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாடும் போது, அசம்பாவிதம் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், இதனை சற்று உயரத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
