/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த பந்தலூர் பஜார்
/
பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த பந்தலூர் பஜார்
ADDED : அக் 20, 2025 11:29 PM

பந்தலூர் ; பந்தலூர் பஜாரில் தீபாவளிக்காக தற்காலிக கடைகள் அமைத்த வியாபாரிகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அதே பகுதியில் விட்டு சென்றதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.
பந்தலூர் பஜார் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஜவுளி மற்றும் பாத்திர வியாபாரிகள், தற்காலிக கடைகள் அமைத்து சாலை ஓரங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு வியாபாரம் நிறைவு பெற்ற நிலையில், கடைகளை காலி செய்த வியாபாரிகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சாலையிலேயே போட்டுச் சென்றனர். சிலர் குப்பைக் கழிவுகளை மூட்டைகளாக கட்டி சாலையில் வைத்து சென்றனர்.
இதனை நகராட்சி துப்புரவு பணியாளர்களும் அகற்றாத நிலையில், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகள் நிறைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதுடன், கழிவு நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு பாதிப்பு உருவாகி உள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் வியாபாரம் நிறைவு பெற்றதும் கழிவுகளை, நகராட்சியில் ஒப்படைத்துச் செல்ல அறிவுறுத்த வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

