/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூட்டி கிடக்கும் நுாலகம்: திறந்தால் வாசகர்களுக்கு பயன்
/
பூட்டி கிடக்கும் நுாலகம்: திறந்தால் வாசகர்களுக்கு பயன்
பூட்டி கிடக்கும் நுாலகம்: திறந்தால் வாசகர்களுக்கு பயன்
பூட்டி கிடக்கும் நுாலகம்: திறந்தால் வாசகர்களுக்கு பயன்
ADDED : நவ 27, 2025 04:36 AM

கூடலுார்: 'கூடலுார் மண்வயல் பகுதியில், பூட்டி கிடக்கும் நுாலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
கூடலுார் மண்வயல் ஆரம்ப சுகாதார மையம் அருகே, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில், நுாலக கட்டடம் அமைக்கப்பட்டு திறந்து செயல்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஊழியர் இன்றி மூடப்பட்டது. தொடர்ந்து செயல்படவில்லை. இதனிடையே, கடந்த, 2022-23 நிதி ஆண்டில், நுாலக கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 'பராமரிப்புக்கு பின் நுாலகம் செயல்படும்,' என, மக்கள் எதிர்பார்த்தனர். இதுவரை நுாலகம் திறக்கப்படவில்லை. இதனால், அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்க கூடிய இளைஞர்கள் பயன் பெற முடியாத நிலையில் உள்ளனர். நுாலகங்களும் பயனற்று போகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'இப்பகுதியினர் பயன்படும் வகையில், இந்த நுாலகத்தை திறந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

