/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிமென்ட் சாலை அமைத்து தர கலெக்டரிடம் கோரிக்கை
/
சிமென்ட் சாலை அமைத்து தர கலெக்டரிடம் கோரிக்கை
ADDED : நவ 27, 2025 01:35 AM
ஊட்டி: 'கூடலுார் தேவர்சோலை மக்கள் சிமென்ட் சாலை அமைத்து தர வேண்டும்,' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவர் சோலை கவுண்டன் கொல்லி பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட, 12 வது வார்டு மாச்சு வயல் பகுதியில் இருந்து கவுண்டன் கொல்லி எஸ்.டி., காலனி வரை செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இங்கு, மயானத்திற்கு செல்லும் வழி மண் சாலையாக உள்ளது.
மழை காலத்தில் இந்த பகுதியில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல சிரமமாக உள்ளது. சாலை வசதி இல்லாததால் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

