/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
/
அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
ADDED : நவ 27, 2025 02:29 AM
ப.வேலுார், பரமத்தி, செட்டியம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் கைலாசம் வரவேற்றார். மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) புருஷோத்தமன் தலைமையில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து,
அறிவியல் இயக்க மண்டல மாநாட்டில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓய்வு ஆசிரியர் சீனிவாசன், அம்பேத்கரின் வரலாற்று நிகழ்வுகளை, பொம்மலாட்டம் மூலம் விளக்கினார்.
நிகழ்ச்சியில், ஆசிரியர் மெய்யழகன், 160 உலக நாடுகளின் நாணயங்களையும், தலைமையாசிரியர் கைலாசம், தொல்லியல் சார்ந்த, 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை படிமங்கள், விலங்குகளின் எச்சங்களை காட்சிப்படுத்தியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

