/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'ஜெருசலேம்' புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் மானியம் பெற அழைப்பு
/
'ஜெருசலேம்' புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் மானியம் பெற அழைப்பு
'ஜெருசலேம்' புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் மானியம் பெற அழைப்பு
'ஜெருசலேம்' புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் மானியம் பெற அழைப்பு
ADDED : நவ 27, 2025 02:28 AM
நாமக்கல்,'ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களிடம் இருந்து மானிய தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய, 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில், 'ஜெருசலேம் புனித பயணம்' மேற்கொண்டு திரும்பிய, 550 கிறிஸ்தவர்களுக்கு, நபர் ஒருவருக்கு, 37,000 ரூபாய் வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருட் சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு, 60,000 ரூபாய் வீதமும், இ.சி.எஸ்., முறையில், நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த, 1க்கு பின், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவத்தை, கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, 2026, பிப்., 28க்குள் உரிய ஆவணங்களுடன், 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம் சேப்பாக்கம், சென்னை-600005' என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

