ADDED : ஜூலை 21, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்: நாகையில், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், திருப்பூண்டியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் மனைவி அகமது நாச்சியார், 66. இவர், தன் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் கோபித்துக் கொண்டு தனியாக வசித்தார்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டின் போர்டிகோவில் அகமது நாச்சியார் துாங்கினார். நள்ளிரவில் மர்ம நபர்கள், பூட்டியிருந்த வீட்டின் இரும்பு கேட்டை துாக்கி ஓரமாக வைத்து விட்டு, மூதாட்டி அணிந்திருந்த, 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்தனர்.
அவர் கூச்சலிட்டதால், மர்ம நபர்கள், கழுத்தை நெரித்து அவரை கொலை செய்து விட்டு, தங்கச்சங்கிலியை பறித்து தப்பினர். கீழையூர் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.