/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
கல்லுாரி விடுதி 3வது மாடியில் இருந்து விழுந்த மாணவர் பலி
/
கல்லுாரி விடுதி 3வது மாடியில் இருந்து விழுந்த மாணவர் பலி
கல்லுாரி விடுதி 3வது மாடியில் இருந்து விழுந்த மாணவர் பலி
கல்லுாரி விடுதி 3வது மாடியில் இருந்து விழுந்த மாணவர் பலி
ADDED : ஜூலை 18, 2025 02:16 AM
நாகப்பட்டினம்,:நாகை அருகே கல்லுாரி விடுதியின் 3வது மாடியில் இருந்து விழுந்த மாணவன் பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவாரூர் கம்பர் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சபரீஸ்வரன், 22. இவர், நாகை அடுத்த பாப்பாகோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லுாரியில், பிசியோதெரபி நான்காம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கல்லுாரி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
படுகாயமடைந்த அவரை கல்லுாரி ஊழியர்கள் மீட்டு, நாகை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபரீஸ்வரன் இறந்தார்.
இதையடுத்து, மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, நேற்று காலை, மாணவனின் உறவினர்கள் இந்திய மாணவ சங்கத்தினருடன் சேர்ந்து, நாகை - வேளாங்கண்ணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுக்கு பின் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. மறியலால் நாகை - வேளாங்கண்ணி, இ.சி.ஆர்., சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து நாகை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.