/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
ஏரியில் மண் எடுக்க எதிர்த்து மறியல் கூடுதல் தலைமை செயலர் பேச்சு
/
ஏரியில் மண் எடுக்க எதிர்த்து மறியல் கூடுதல் தலைமை செயலர் பேச்சு
ஏரியில் மண் எடுக்க எதிர்த்து மறியல் கூடுதல் தலைமை செயலர் பேச்சு
ஏரியில் மண் எடுக்க எதிர்த்து மறியல் கூடுதல் தலைமை செயலர் பேச்சு
ADDED : ஆக 17, 2025 02:15 AM

நாகப்பட்டினம்:-நாகை அருகே ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இ.சி.ஆரில் மறியலில் ஈடுபட்டனர். கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் பேச்சு நடத்தினார்.
நாகை மாவட்டம், பிரதாபராமபுரத்தில் 15 ஏக்கரில் சின்னேரி உள்ளது.
நாகை- - விழுப்புரம் நான்கு வழி சாலை பயன்பாட்டிற்காக, இந்த ஏரியில் இருந்து மண் எடுத்துக் கொள்ள தனியாருக்கு, கனிம வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், கிராம பயன்பாட்டிற்கு மட்டுமே ஏரி மண் பயன்படுத்த வேண்டும், கிராமத்தை விட்டு வெளியில் எடுத்து செல்லக்கூடாது என்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், கிராம முக்கியஸ்தர்கள் 11 பேர் மீது கீழையூர் போலீசார் வழக்கு பதிந்து நள்ளிரவில் கைது செய்ய முயற்சித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரதாபராமபுரம் கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், நேற்று காலை, செருதுார் பகுதியில் திரண்டனர்.
வேளாங்கண்ணி- - துாத்துக்குடி இ.சி.ஆர்., சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், அவ்வழியே வந்த கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார். தொடர்ந்து, ஆர்.டி.ஒ., அரங்கநாதன் தலைமையில் அதிகாரிகள் பேசினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின், தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
நான்கு மணி நேரம் இ.சி.ஆர்., சாலையில் நீடித்த போராட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.