/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிங்கப்பூரில் துணைமேலாளர் பதவி எனக்கூறி கழிவறை 'கிளீனர்' பணி மதுரையில் ரூ.3.73 லட்சம் மோசடி

ADDED : நவ 15, 2025 05:41 AM
மதுரை: சிங்கப்பூரில் நிறுவனம் ஒன்றில் துணை மேலாளர் பதவி பெற்றுத்தருவதாக கூறி ரூ.3.73 லட்சம் பெற்று ஓட்டல் கழிவறையை சுத்தப்படுத்தும் பணி தந்ததாக மதுரையைச் சேர்ந்த 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மதுரை காமராஜர்புரம் வெங்கடேஷ் பாபு 39. குடும்ப சூழலால் சிங்கப்பூர் சென்று வேலை செய்ய திட்டமிட்டார். இதற்காக ஏஜன்டுகள் மூலம் மதுரை நரிமேடு ஸ்ரீகுழந்தை ஆனந்தர் ஆன்லைன் டிரேடு நிறுவனத்தை அணுகினார். அதன் உரிமையாளர் சாந்தகுமாரி, 'சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் துணைமேலாளர் பதவி உள்ளது. அதற்கு ஏற்பாடு செய்துள்ளேன்' எனக்கூறினார். இதைநம்பி சாந்தகு மாரிக்கும், ஏஜன்டுகள் பழனிகுமார், உமாதேவி, ஜெயமீனா ஆகியோருக்கும் மொத்தம் ரூ.3.73 லட்சம் கொடுத்தார்.
திட்டமிட்டபடி சிங்கப்பூருக்கு வெங்கடேஷ்பாபு சென்றார். விமான நிலையத்தில் அவரை அழைத்துச்செல்ல யாரும் வரவில்லை. அவரிடம் இருந்த விசாவில் வேலையில் சேர உள்ள நிறுவனத்தின் முகவரி இருந்தது. அதை தேடிப்பிடித்து சென்றபோது அது ஓட்டல் எனத்தெரிந்தது. அதிர்ச்சியடைந்தவர் ஓட்டல் நிர்வாகத்திடம் விசாரித்தபோது, 'உங்களை பாத்திரம், கழிவறை கழுவும் வேலைக்குதான் அழைத்திருந்தோம்' எனக்கூறி மேலும் அதிர்ச்சியடைய செய்தனர். இதுகுறித்து சாந்தகுமாரி, ஏஜன்டுகளை கேட்டபோது சரியான பதில் தராமல் மழுப்பினர்.
நொந்துபோன வெங்கடேஷ்பாபு, வேலைக்கு சேராமல் ஓரிடத்தில் இரவு தங்கினார். சிலரது முயற்சி மூலம் ஒருநாள் கழித்து இந்தியா திரும்பினார். இதுகுறித்து மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். சாந்த குமாரி உட்பட 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.