/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதர் மண்டி வீணாகும் பயிற்சிகூடம், பூங்கா
/
புதர் மண்டி வீணாகும் பயிற்சிகூடம், பூங்கா
ADDED : செப் 07, 2025 03:50 AM

மேலுார்: திருவாதவூரில் ரூ. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா, உடற்பயிற்சி கூடம் போன்றவை பயன்பாடு இல்லாததால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
கிராமத்தின் மையப் பகுதியில் மக்களின் ஆரோக்கியம், மன அமைதி, சிறுவர்களின் பொழுது போக்கிற்காக 2016 - -17ல் பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் பாழாவதால் விஷப் பூச்சிகளின் புகலிடமாக மாறி உள்ளது. மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: அங்கன்வாடி மையம், திருமண மண்டபம், கோயில் அருகே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாத பூங்காவில் புதர் மண்டியதால் விஷப் பூச்சிகள் படையெடுக்க ஆரம்பித்துள்ளது.
அதனால் அங்கன்வாடி மையம் வரும் குழந்தைகள், பெற்றோரின் உயிருக்கு உத்தர வாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி வருவதால் பெண்கள் இப்பகுதிக்கு வரவே அச்சப்படுகின்றனர்.
பூங்காவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தினுள் இருந்த உபகரணங்கள் திருடு போகின்றன. ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க வேண்டும். விரைந்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.