/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிதி இருந்தும் மனமில்லை காலம் கடத்தும் நீர்வளத் துறை
/
நிதி இருந்தும் மனமில்லை காலம் கடத்தும் நீர்வளத் துறை
நிதி இருந்தும் மனமில்லை காலம் கடத்தும் நீர்வளத் துறை
நிதி இருந்தும் மனமில்லை காலம் கடத்தும் நீர்வளத் துறை
ADDED : செப் 07, 2025 03:49 AM

மேலுார்: திருவாதவூரில் சிதிலமடைந்த இலுப்பக்குடி கால்வாயை மராமத்து பார்க்காமல் காலம் கடத்துவதால் 800 ஏக்கர் நிலம் தரிசாகும் அவலம் நிலவுவதாக நீர்வளத்துறை மீது புகார் எழுந்துள்ளது.
கள்ளந்திரி பத்தாவது கால்வாய் வழியாக வரும் தண்ணீரால் மருதுார் கண்மாய் நிரம்பும். இக் கண்மாயில் இருந்து 4 ஏ மடை வழியாக இலுப்பகுடி கால்வாயில் செல்லும் தண்ணீரால் 10 க்கும் மேற்பட்ட கண்மாய்கள், 800 ஏக்கருக்கு மேல் பாசனம் பெறும். கால்வாயின் இருபுறமும் மரம் முளைத்து, சிலாப்புகள் பெயர்ந்து சிதிலமடைந்து விட்டது. நீர்வளத் துறையினர் கால்வாயை மராமத்து பார்க்கவில்லை.
விவசாயி கிருஷ்ணன் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கால்வாய், கண்மாயை பராமரிக்க நீர்வளத் துறைக்கு ரூ.2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்படுகிறது. இதுவரை மராமத்துப் பணி நடக்கவில்லை. தண்ணீர் திறக்க 10 நாட்களே உள்ள நிலையில் இலுப்பக்குடி கால்வாயை மராமத்து பார்க்காமல் சிலாப்புகள் உடைந்து மண் தரையாகிவிட்டது. மடை, ஷட்டர் அனைத்தும் பழுதானதால் பாசன தண்ணீர் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. நீர்வளத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் மராமத்து பார்க்க வேண்டும் என்றார்.