ADDED : செப் 07, 2025 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் கள்வேலிப்பட்டி ஊராட்சி கம்மாபட்டியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட குளியல் தொட்டி சேதமடைந்துள்ளது.
இங்குள்ள ஊருணி அருகே ஓராண்டுக்கு முன் போர்வெல் வசதியுடன் குளியல் தொட்டி கட்டப்பட்டது.
'ஹாலோ பிளாக்' கற்களை வைத்து கட்டப்பட்ட தொட்டி பயன்பாட்டிற்கு வந்த சில மாதங்களிலேயே கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டது. மேலும் 'டைல்ஸ்' கற்கள் பதித்த தொட்டியின் உட்புறங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வெளியேறி வந்தது.
இதனால் இப்பகுதியினர் குளியல் தொட்டியை பயன்படுத்த முடியாமல் பாசி படிந்த ஊருணியில் குளித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் குளியல் தொட்டியை சீரமைத்து தரவில்லை என கிராமமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.