ADDED : செப் 07, 2025 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்:'சோழவந்தான் அருகே தச்சம்பத்து - நகரி ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் வலியுத்தினர்.
அப்பகுதியைச் சேர்ந்த சுசிலா கூறியதாவது: இங்கு ரோடு அமைத்து சில மாதங்களே ஆகிறது. தச்சம்பத்தில் இருந்து ரிஷபம் வழியாக நகரி செல்ல ஏராளமான வாகனங்கள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன.
விவசாய பயன்பாட்டு கனரக வாகனங்கள், டிப்பர் லாரிகள் அடிக்கடி இவ்வழியை பயன்படுத்துகின்றன. ரோட்டை சரியாக அமைக்காததால் சிறிது சிறிதாக பெயர்ந்து தற்போது பெரிய பள்ளமாக மாறிவிட்டது.
சில நேரம் தண்ணீர் தேங்குவதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். இப்பள்ளத்தால் ரோடு குறுகி ஒருவழிப்பாதையாக மாறிவிட்டது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என்றார்.