/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எஸ்.கே.எம். குழும தலைவர் சதாபிஷேகம்
/
எஸ்.கே.எம். குழும தலைவர் சதாபிஷேகம்
ADDED : ஆக 14, 2025 04:44 AM

மதுரை: கோவை கொடிசியாவில் எஸ்.கே.எம்., குழுமத் தலைவர் மயிலானந்தன் - குட்டிலட்சுமி தம்பதியரின் சதாபிஷேக விழா நடந்தது.
ஆழியாறு அறிவுத் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மயிலானந்தனின் வாழ்க்கை வரலாறு குறும்படம் வெளியிடப்பட்டது. மேலும் அவரைப் பற்றிய 'வாழ்வெனும் பேரின்பம்', 'ஆயிரம் பிறை கண்ட அருள்நிதி' ஆகிய புத்தகங்கள், ராம்ராஜ் காட்டன் சார்பில் 'வேதாத்திரியம் 80' என்ற புத்தகம் வெளியிடப்பட்டன.
அவிநாசிலிங்கேஸ்வர் கோயில் தாமரைக் குளக்கரையில் 8 ஆயிரம் பனங்கன்றுகளை பல்லடம் வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் சுந்தர்ராஜ் நட்டார். உலக சமுதாய சேவா சங்க வளர்ச்சி நிதியாக ரூ. 9 கோடியை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், நிர்வாகிகள் வழங்கினர்.
மயிலானந்தன் பேசியதாவது:மனவளக்கலை ஆன்மிகப் பயிற்சியை வாழ்க்கை கல்வியாக பல்கலைகளுடன் இணைந்து வழங்குகிறது.
மேலும் பிறருக்குத் துன்பம் தராமலும், பிறரால் துன்பம் நேராமலும் வாழும் நெறியை பயிற்றுவிக்கிறது. உலக சமுதாய சேவா சங்கத்தின் கீழ் 220 அறிவுக்கோயில்கள், 400 அறக்கட்டளைகள், 2,500 தவ மையங்கள், 18 ஆயிரத்து 500 பேராசிரியர்கள், 372 கிராமங்கள், 34 பல்கலைகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என பல்வேறு வழிகளில் பலர் பயிற்சி பெறுகின்றனர், என்றார். எஸ்.கே.எம்., குழுமம், சேவா சங்கம் ஏற்பாடுகளை செய்தன.