sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

/

 திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

 திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

 திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு


ADDED : மார் 05, 2026 04:51 AM

Google News

ADDED : மார் 05, 2026 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.

மதுரை டி.ஆர்.ஓ., காலனியில் ரூ.5.19 கோடி மதிப்பில் 200 மகளிர் தங்கும் வகையிலான 'தோழி' மகளிர் விடுதியை பார்வையிட்டார். தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள ஒலிம்பிக் அகாடமியில் ரூ.6 கோடி மதிப்பில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், டென்னிஸ் மைதானம் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

மேற்கு தாலுகாவில் கோச்சடையில் மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், 120 சுய உதவிக்குழுவினர்கள், ரூ.46 லட்சம் கடனுதவி பெற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சட்டைகள் தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை பார்வையிட்டார். தொடர்ந்து சாந்திசதன் தனியார் குடியிருப்பு பகுதியில் புதிய ஓட்டுச்சாவடி மையம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மேற்கு தாலுகாவில் கோச்சடை அருகே வைகை ஆற்றில் இருந்து அவனியாபுரம் கண்மாய்க்கு செல்லும் வரத்துக் கால்வாய் துார்வாரப்படும் பணிகளை பார்வையிட்டார். விராட்டிப்பத்தில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்படும் முதலமைச்சர் சிறுவிளையாட்டு அரங்கை பார்வையிட்டார். அங்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காய்ச்சல் வார்டு, உள், வெளி நோயாளிகள் பிரிவுகளை பார்வையிட்டவர், நோயாளிகளிடம் சிகிசசை குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது தாசில்தார் முத்துப்பாண்டி, மகளிர்திட்டம் இயக்குனர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us