sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி:மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி:மதுரை

இன்றைய நிகழ்ச்சி:மதுரை

இன்றைய நிகழ்ச்சி:மதுரை


ADDED : மார் 05, 2026 04:51 AM

Google News

ADDED : மார் 05, 2026 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கும்பாபிஷேகம்: பாண்டுரெங்கன் கோயில், ஹார்விபட்டி, காலை 7:00 மணி முதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், காலை 9:00 முதல் 10:30 மணி வரை, சயனாதிவாஸம், சவுத்ரம், யுக்த பிரதான ஹோமங்கள், பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 முதல் இரவு 9:30 மணி வரை.

குருவாரம் முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவருக்கு சிறப்பு பூஜை: மஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

திருக்கல்யாணம்: வல்லடிகாரர் கோயில், அம்பலகாரன்பட்டி, மதியம் 3:00மணி.

கும்பாபிஷேகம்: மந்தை சாமி -சின்னடக்கி- பெரியடக்கி அம்மன் -ஆண்டி அரசு மகன் கோயில், சூரக்குண்டு, காலை 10:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, திருப்பாலை, காலை 8:00 மணி, பக்தி சொற்பொழிவு, மதியம் 1:00 மணி முதல்.

பகவத்கீதை சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் தெரு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி: காஜிமார் தெரு பள்ளி வாசல், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர் தியாகராஜன், துணை மேயர் நாகராஜன், மதுரை கத்தோலிக்க சபை, பல்சமய உரையாடல் பணிக்குழு செயலர் பால் பிரிட்டோ, நிலையூர் ஆதினம் சுப்பிரமணிய நந்தா, உலமா சபை மாவட்ட தலைவர் சதகத்துல்லாஹ், ஏற்பாடு: காஜி மஹல்லா அமைப்பு, மாலை 5:00 மணி.

தமிழ்க் கூடல் - சங்க இலக்கியமும், சமகால இலக்கியங்களும்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, சிறப்புரை: எழுத்தாளர் தமிழ் மணவாளன், ஏற்பாடு: உலகத் தமிழச் சங்கம், காலை 10:30 மணி.

மதுரை ஒலிம்பிக் அகாடமியில் பன்னோக்கு உள்விளையாட்டு அரங்கம் (கபடி, டேபிள்டென்னிஸ்) திறப்பு: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ரூ.6 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கபடி, டேபிள்டென்னிஸ் அரங்கம் திறப்பு, திறப்பாளர்: துணை முதல்வர் உதயநிதி, பங்கேற்பு: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மதியம் 12:30 மணி.

பள்ளி, கல்லுாரி

32வது ஆண்டு விழா: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மற்றும் ஆர்.எல்., இன்ஸ்டி டியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, தலைமை: கல்லுாரிச் செயலர் டாக்டர் எல்.ராமசுப்பு, சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் சாலமன் பாப்பையா, மாலை 5:30 மணி.

பவள விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 'வேதியியலின் எல்லைகள் - 2026' தேசிய கருத்தரங்கம்: மதுரை கல்லுாரி, தலைமை: தலைவர் சீதாராமன், முன்னிலை: முதல்வர் சுரேஷ், காலை 10:00 மணி, சிறப்பு அமர்வுகள், ஏற்பாடு: வேதியியல் துறை, மதியம் 2:00 மணி முதல்.

'உன்னை அறிந்தால்' கருத்தரங்கம்: யாதவர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா ஓட்டல் குழும நிறுவனர் கண்ணன், சிறப்புரை: வருணா மீடியா சொல்யூஷன்ஸ் நிர்வாக பங்குதாரர் ரத்னராஜ், முன்னிலை: முதல்வர் ராஜூ, ஏற்பாடு: கல்லுாரி தொழில் முனைவோர் மையம், வணிகவியல் துறை உயராய்வு மையம், மதியம் 12:12 மணி.

வாசகர் வட்டம் சார்பில், பட்டத்தி மைந்தன் எழுதிய 'ஜீவா' நுால் மதிப்புரை: ஆயிர வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, தலைமை: கல்லுாரி முதல்வர் சிவாஜி கணேசன், ஏற்பாடு: நுாலகர் பவானி, மதியம் 2:30 மணி.






      Dinamalar
      Follow us