ADDED : செப் 07, 2025 03:44 AM
மேலுார்: மேலுாரில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் 6வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடந்தது. ஆண்டறிக்கையை செயலாளர் தமிழையா, நிதிநிலை அறிக்கையை பொருளாளர் அப்துல் ரகுமான் வாசித்தனர்.
ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஸ்டேட் வங்கி கிளை மேலாளர்கள் மைதிலி, கார்த்தியாயினி, கிளை கருவூல அதிகாரிகள் குமரன், சிவக்குமார் பேசினர்.
மாதத்தின் இடைப்பட்ட நாளில் ஓய்வூதியர் இறந்தால் அம்மாதம் முழுவதுமாக கணக்கீடு செய்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஓய்வூதியர்களின் பேரன், பேத்திகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் முகமது யாசின், முல்லை பெரியாறு வைகை ஒருபோக பாசன சங்கத் தலைவர் முருகன், கரும்பு விவசாய சங்கத் தலைவர் பழனிச்சாமி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், பாஸ்கரன், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற தாசில்தார் மணி, சிதம்பரம் செய்திருந்தனர். துணைத் தலைவர் ராமலிங்கம் நன்றி கூறினார்.