/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளி வகுப்பறைகள் அமைச்சர் திறப்பு
/
பள்ளி வகுப்பறைகள் அமைச்சர் திறப்பு
ADDED : நவ 05, 2025 01:06 AM
மதுரை: மதுரை பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.53 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை, நுாலகக் கட்டடங்களை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
அவர் பேசுகையில், கல்வித்துறையில் ஏராளமான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
அரசு பள்ளிகளில் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்கள் கல்வியிலும், பிற துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்படுகிறது என்றார்.
துணைமேயர் நாகராஜன், கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், துணை கமிஷனர் ஜெய்னுலாப்தீன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் இந்திராதேவி, தலைமையாசிரியைகள் முனியம்மாள் (மேல்நிலை), உஷாராணி (தொடக்க பள்ளி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

