நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சிலைமானில் தங்கமயில் ஜூவல்லரி, தானம் அறக்கட்டளை, சுகம் வட்டார களஞ்சியம் சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனையின் கண் பரிசோதனை முகாம் நடந்தது.
சுகாதார ஒருங்கிணைப்பாளர் முத்தையா தலைமை வகித்தார். ஜூவல்லரி முதன்மை மேலாளர் செல்வம், சத்யநாராயணன் குத்துவிளக்கேற்றினர். டாக்டர் தாரிணி தலைமையில் 173 பேர் பரிசோதிக்கப்பட்டு, கண்புரை பாதிப்புள்ள 40 பேர் அறுவை சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் ஷாகிரா, ஷெல்ஸியா ஒருங்கிணைத்தனர். கணக்காளர் கார்த்திகா, முருகேசன் ஏற்பாடுகளை செய்தனர்.