ADDED : ஆக 15, 2025 03:09 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே அழகாபுரி கண்மாய் மறுகால் பாயும் பகுதியில் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் டிராக்டர்களில் மண் திருடுகின்றனர்.
அழகாபுரி- இடையபட்டி இடையே உள்ள இக்கண்மாய்க்கு பாலமேடு சாத்தையாறு அணை கால்வாய் மூலம் நீர்வரத்து உள்ளது. கண்மாய் மேற்கு பகுதியில் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் இரவு, பகலாக கண்மாய் கரையை ஒட்டிய குறுகலான இடத்தில் மண்ணை இயந்திரங்கள் மூலம் அள்ளுகின்றனர். பின்னர் கண்மாய் கரை வழியாக இடையபட்டி, அழகாபுரிக்கு கொண்டு செல்கின்றனர். அடிக்கடி வாகனங்கள் சென்று வருவதால் கண்மாய் கரை வலுவிழந்து வருகிறது.
அனுமதியின்றி திருடப்படும் மண்ணை பயன்படுத்தி விளை நிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றவது உள்ளிட்ட தேவைகளுக்கு விற்பனை செய்கின்றனர். வருவாய் துறையினர் கண்டுகொள்வதில்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.