/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்
/
பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்
ADDED : ஆக 15, 2025 02:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பட்டுப்போன மரங்களை அகற்றாமல் அதிகாரிகள் அசட்டையாக இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது.
டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் ரோட்டோரம் உட்பட பல்வேறு இடங்களில் பட்டுப்போன மரங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் மழை, காற்று நேரங்களில் மரங்கள் கீழே சாய்வதும் தொடர்கிறது. சாய்ந்த பிறகு மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கும் உள்ளாட்சி துறையினர், விபத்து அபாயத்துடன் காய்ந்த நிலையில் நிற்கும் மரங்களை அகற்ற அக்கறை காட்டாதது ஏனென்று தெரியவில்லை.
இது போன்ற மரங்களால்தான் விபத்தும், ஆபத்தும் அதிகமுள்ளது. ஒன்றிய அதிகாரிகள் ஆபத்தான மரங்களை மாவட்டம், வனத்துறை நிர்வாகங்களிடம் ஒப்புதல் பெற்று அகற்றுவது அவசியம்.