ADDED : டிச 23, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் குளிர்கால இலவச ஹாக்கி பயிற்சி, ஹேண்ட்பால் பயிற்சி முகாம் நாளை (டிச. 24) முதல் ஜன. 4 வரை நடத்தப்படுகிறது.
10 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிருக்கு எல்லீஸ்நகர் ஹாக்கி அகாடமி சார்பில் எல்லீஸ்நகர் மைதானத்தில் இலவச ஹாக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 99441 00762.
ஹேண்ட்பால் பயிற்சி பேன்யன் பவுண்டேஷன், திருநகர் மதர் குளோப் அகாடமி சார்பில் திருநகர் அண்ணா பூங்காவில் இலவச ஹேண்ட்பால் பயிற்சியில் 21 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிர் பங்கேற்கலாம். முன்பதிவு: 82206 67830.

