/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அறநிலையத்துறையின் கீழ் ஆரியபட்டி கல்யாண கருப்பசாமி கோயில்
/
அறநிலையத்துறையின் கீழ் ஆரியபட்டி கல்யாண கருப்பசாமி கோயில்
அறநிலையத்துறையின் கீழ் ஆரியபட்டி கல்யாண கருப்பசாமி கோயில்
அறநிலையத்துறையின் கீழ் ஆரியபட்டி கல்யாண கருப்பசாமி கோயில்
ADDED : டிச 23, 2025 07:14 AM
உசிலம்பட்டி: செல்லம்பட்டி ஒன்றியத்தில் ஆரியபட்டியில் உள்ளது கல்யாணகருப்பசாமி கோயில். இப்பகுதி மக்களின் குலதெய்வ கோயில். 2009ல் இங்கு பெருங்கும்பிடு கிடாவெட்டு விழா விமரிசையாக நடந்தது.
மகாசிவராத்திரி, தமிழ்மாதப்பிறப்பு, குடும்ப விழாக்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்த பக்தர்கள் திரண்டு வருவர். நிர்வாக குழப்பத்தால் உண்டியல் வசூல், வருவாய்த்துறையினர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
கடந்த 2024 மே மாதத்தில் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர். சில நாட்களுக்குப்பின் உண்டியலில் இருந்த சில்லரைகளை மட்டும் பொட்டலமாக கட்டி வயல்வெளியில் போட்டுச் சென்றனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் அறநிலையத்துறையின்கீழ் வந்தது. 'கோயில் வழிபாடு எப்போதும் போல் தொடரும். நன்கொடை கொடுக்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்தை அணுகி ரசீது பெற்றுக்கொள்ளலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.