
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கல்லுாரிகளுக்கான ஹேண்ட்பால் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி19 - 8 என்ற புள்ளிகளில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியை வீழ்த்தியது.
வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி 3ம் இடம் பெற்றது.
மகளிர் இறுதிப் போட்டியில் பாத்திமா கல்லுாரி 26 - 13 என்ற புள்ளிகளில் லேடிடோக் கல்லுாரியை வீழ்த்தியது. யாதவர் கல்லுாரி 3ம் இடம் பெற்றது.
ஆணைய முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, விடுதி மேலாளர் முருகன், பயிற்சியாளர் குமரேசன் பாராட்டினர்.