நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான கக்கன் நினைவு தினத்தை முன்னிட்டு தும்பைபட்டி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார், ஆர்.டி.ஓ., சங்கீதா, தாசில்தார் செந்தாமரை உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், அவைத் தலைவர் ராஜேந்திரன், ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை, அமைப்புச் செயலாளர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
* திருநகரிலுள்ள தனது அலுவலகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

