ADDED : டிச 14, 2025 06:35 AM
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் எதிரே நேஷனல் இன்ஸ்டிடியூட் பயிற்சி மையத்தின் 21 ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கல்லுாரியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் 70 மாணவர்களுக்கு இலவச வங்கித் தேர்வு பயிற்சி நடைபெற உள்ளது.
இதற்கான நுழைவுத் தேர்வு டிச., 21 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு நேஷனல் இன்ஸ்டிடியூட்டில் நடைபெறும். தேர்வாகும் மாணவர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 4 மாதங்கள் இலவச பயிற்சி இன்ஸ்டிடியூட்டில் அளிக்கப்படும்.
முன்பதிவு செய்ய 95666 59104 வாட்ஸ்ஆப்பிற்கு பெயர், முகவரி, அலைபேசி எண், கல்லுாரியின் பெயர், படிக்கும் ஆண்டு, பாடப்பிரிவை தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். தேர்விற்கு முன்பதிவு செய்ய டிச., 20 கடைசி நாள் என இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

