ADDED : செப் 07, 2025 03:54 AM
மதுரை: மதுரையில் சென்னை கூத்துப் பட்டறை சார்பில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நுால் வெளியீட்டு விழா, பேராசிரியர் மோகன் தலைமையில் நடந்தது. பேராசிரியர் காந்திதுரை முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் மகேந்திரபாபு வரவேற்றார். அவர் எழுதிய 'பூந்தோட்டம்' எனும் சிறுவர்களுக்கான பாடல் நுாலினை புலவர் சன்னாசி வெளியிட, ஆசிரி யர் கிறிஸ்துஞான வள்ளுவன் பெற்றார். கவிஞர் மணி மீனாட்சி சுந்தரம் மதிப்புரை வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் ராணிமாலா, தனலட்சுமி, பெல்சியா, ரேவதி சுந்தரி, ராமநாதன், சக்திகுமார், அருள் செபாஸ்டின், சுந்தர் ஆகியோருக்கு 'ஆற்றல் ஆசிரியர்' விருது வழங்கப் பட்டது.
கவிஞர் மூரா, கூத்துப் பட்டறை செயலாளர் லதா, சங்கர சபாபதி, முருகேசன், ரகமத்துல்லா, எழுத்தாளர் அய்யனார் ஈடாடி வாழ்த்துரை வழங்கினர். தமிழாசிரியர்கள் நாகேந்திரன், சுப்பிரமணி தொகுத்து வழங்கினர். விழாவினை சத்தியசீலன், முருகன், லட்சுமி, கார்த்தி கேயன், முத்துராசா, சினிமதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கூத்துப் பட்டறை நிறுவனர் முத்துசாமி நன்றி கூறினார்.