/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
1068 மதுபாட்டில்கள் பறிமுதல்: 7 பேர் கைது
/
1068 மதுபாட்டில்கள் பறிமுதல்: 7 பேர் கைது
ADDED : செப் 07, 2025 03:53 AM
மதுரை: மதுரை மண்டல மதுவிலக்கு சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் மணிகுமார் தலைமையில் எஸ்.ஐ., சின்ன மந்தையன், ஏட்டுகள் சதீஷ் குமார், மணி கண்டன் ஆகியோர் திண்டுக்கல் - பழநி ரோட்டில் உள்ள ஒரு இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வெளிநாட்டு வகைகளை சேர்ந்த 329 மதுபாட்டில்கள், 456 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திண்டுக்கல் அண்ணா மலை மில் காலனி விஜய ராகவன் 45, பூபதி 45, ஆகியோரை கைது செய்தனர்.
மதுரை வடக்குமாசிவீதி டாஸ்மாக் கடை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றதாக கரிமேடு ராஜேந் திரன் 67, நாகமலைபுதுக்கோட்டை சக்திவேல் 44, முண்டுவேலம்பட்டி ஜெயபால் 45, பொன்னகரம் சின்னவெங்கையன் 55, தேனி ஆண்டிப்பட்டி தேவேந்திரன் 56, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 283 மதுபாட்டில்கள், ரூ.2.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.