/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சூரியனை பார்த்து நாய் குரைத்துள்ளது விஜய் மீது தி.மு.க., விமர்சனம்
/
சூரியனை பார்த்து நாய் குரைத்துள்ளது விஜய் மீது தி.மு.க., விமர்சனம்
சூரியனை பார்த்து நாய் குரைத்துள்ளது விஜய் மீது தி.மு.க., விமர்சனம்
சூரியனை பார்த்து நாய் குரைத்துள்ளது விஜய் மீது தி.மு.க., விமர்சனம்
ADDED : ஆக 25, 2025 05:27 AM
மதுரை: சூரியனை பார்த்து நாய் குரைத்தால் அதன் மீது சூரியன் கோபம் கொள்வதில்லை என, த.வெ.க., தலைவர் விஜய் குறித்து தி.மு.க., ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., சந்திரகுமார் கடுமையாக விமர்சித்தார்.
மதுரையில் நடந்த த.வெ.க., இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலினை அங்கிள்' என விளித்துப் பேசினார். இது தி.மு.க., தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் நேரு அவரது தராதரம் அவ்வளவு தான். தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். நாங்களும் தேர்தலில் அவருக்கு நல்லா பதில் சொல்வோம் என பதில் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்ற தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரக்குமார் கூறுகையில், சூரியனை பார்த்து நாய் குரைக்கும். அதற்காக நாய் மீது சூரியன் கோபப்படுவதில்லை. அது நாய் என்று தெரிந்து பெரிதாக எடுத்துக் கொள்ளவதில்லை. உலகத்திற்கே சூரியன் தான் வெளிச்சம் கொடுக்கிறது. வெளிச்சம் கொடுக்கும் வேலையை மட்டும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.