ADDED : ஜூலை 17, 2024 12:34 AM
மதுரை :
* மதுரை பசுமலை சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் பவுலஸ் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் வழங்கினர். அதிக தேர்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். கலை நிகழ்ச்சிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ஐரின் ஹேனா, பிளாரன்ஸ், மோசஸ் பாக்யராஜ் அலுவலர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியர் ஜம்புரோ தாமஸ் நன்றி கூறினார்.
* மதுரை வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் விழா நடந்தது. பேராசிரியர் விநாயமூர்த்தி காமராஜர் வாழ்வியல் முறை குறித்து பேசினார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை இந்துமதி வரவேற்றார். ஆசிரியைகள் கலைமதி, சாந்தி ஏற்பாடு செய்தனர். ஆசிரியர் ரமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.
எழுமலை: எழுமலை அருகே எம்.கல்லுப்பட்டி நாடார் உறவின்முறை சார்பாக காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் ரத்த தான முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் விஸ்வநாதபிரபு, டி.ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சரவணகுமார் முன்னிலையில் முகாம் நடந்தது. அரசுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். உறவின்முறை நிர்வாகிகள் அசோகன், ஞானப்பழம், சுப்பிரமணி, குமார்,சண்முகம், இளங்கோ கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி: செல்லம்பட்டி ஒன்றியம் கு.நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி் ஊர் முதன்மைக்காரர் வேலுச்சாமிதலைமையில் விழா நடந்தது. தலைமையாசிரியர் சின்னசாமி, வாலாந்துார் போலீஸ் எஸ்.ஐ., சிவசங்கரபாண்டி, தர்மர், பாண்டியன் கனகராஜ், செந்தில் மணவாளக் கண்ணன், காமராஜர் நலச்சங்க நிர்வாகிகள் பள்ளிக்கு மின்விசிறிகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கினர்.
ஆசிரியர் பசும்பொன் இளங்கோ நன்றி கூறினார்

