ADDED : செப் 25, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் கே.கே.தினேஷ் தலைமையில் நடந்தது. இதில் 2026 – 28 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
புதிய தலைவராக கே.கே.குபேந்திரன், பொதுச் செயலாளராக ராம்லக் ஷ்மன்ஜி, பொருளாளராக டி.என்.சூரியபிரகாஷ், உடனடி முன்னாள் தலைவராக கே.கே.தினேஷ், துணைத் தலைவர்களாக குமரேஷ்பாபு, தினகரன், இணைச் செயலாளர்களாக விக்னேஷ்பாபு, ருபேஷ்பாபு தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக ராம்சுந்தர், சிவநாத்பாபு, சிவகுமார், ரமேஷ்பாபு, முரளிதரன், தனசேகரன் உள்ளிட்ட 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
