/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
/
விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : அக் 28, 2025 01:19 AM
ஓசூர், ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியில் விஜய விநாயகர் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில், பாலமுருகன், அண்ணாமலை ஈஸ்வரன், விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நாகர், காலபைரவர், நவக்கிரகம், ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகள் தனித்தனியாக உள்ளன. இக்கோவில் ராஜகோபுரம், மூலவர் கோபுரம் மற்றும் இதர தெய்வங்களின் கோபுரங்களுக்கு கும்பாபிஷேக விழா கடந்த, 24ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக, அலங்காரம் நடந்தது.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை, 7:00 மணிக்கு லட்சுமி பூஜை, கோ பூஜை, காலை, 10:30 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, கோவிலை சுற்றி வானத்தில் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் சுதா நாகராஜன், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, பா.ஜ., நிர்வாகி ராமலிங்கம் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

