/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : அக் 28, 2025 01:19 AM
கிருஷ்ணகிரி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில், 12ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், 73 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, தொழில் வழிகாட்டுதல் விழிப்புணர்வு, கிளாட் மற்றும் ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சவால்கள் மற்றும் பொதுவான தவறுகள் பற்றியும், பிரீமியர் நிறுவனங்களில் பி.டபிள்யூ.டி., ஒதுக்கீடு குறித்து வழிகாட்டுதல், உயர்கல்வியைத் தொடர கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து தெளிவான விளக்கங்களை, மாநில கருத்தாளர்கள் கலைநேசன், கோமதி ஆகியோர்
எடுத்துரைத்தனர்.
இப்பயிற்சியை சி.இ.ஓ., (பொ) முனிராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்து, பயிற்சி கையேட்டை வழங்கினார். இதில், டி.இ.ஓ., ராசன், மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நரசிம்ம ராஜலட்சுமி, கணேசன், சிறப்பு பயிற்றுனர்களாக அருண்குமார், வெங்கடேசன், ஜெய்சங்கரி, ரோசிராணி, ரேவதி, ரமேஷ், ஜித்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

