/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கன்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.3.48 லட்சம் குட்கா பறிமுதல்
/
கன்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.3.48 லட்சம் குட்கா பறிமுதல்
கன்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.3.48 லட்சம் குட்கா பறிமுதல்
கன்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.3.48 லட்சம் குட்கா பறிமுதல்
ADDED : அக் 28, 2025 01:52 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., தமிழ்மணி மற்றும் போலீசார், ராயக்கோட்டை சாலையிலுள்ள அசோக் பில்லர் சர்க்கிள் பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி கன்டெய்னர் லாரியை சோதனை செய்ய நிறுத்தினர். டிரைவரிடம் பின்புற கன்டெய்னரை திறக்கும்படி போலீசார் கூறினர்.
ஆனால், திறப்பது போல் நடித்து போலீசாரை ஏமாற்றிய டிரைவர், லாரியை எடுத்து கொண்டு, ராயக்கோட்டை சாலையில் வேகமாக சென்றார். சந்தேகமடைந்த போலீசார், லாரியை, ஜீப்பில் விரட்டி சென்றனர். ராயக்கோட்டை சாலையில், 1.5 கி.மீ., துாரத்தில் தொரப்பள்ளி அக்ரஹாரம் பிரிவு சாலை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் இறங்கியது. அதற்கு மேல் லாரியை ஓட்டி செல்ல முடியாது என முடிவு செய்த டிரைவர், லாரியில் இருந்து இறங்கி தப்பியோடினார்.
போலீசார் கன்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில், 3.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கைப்பற்றினர். விசாரணையில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து, திருப்பூருக்கு புகையிலை பொருட்களை டிரைவர் கடத்தி சென்றது தெரிந்து, விசாரித்து வருகின்றனர்.

