/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடற்புழு நீக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
/
குடற்புழு நீக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : டிச 23, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வேளாண்மைத்துறை சார்பில், செட்டிப்பள்ளி கிராமத்தில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து பயிற்சி நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அதியமான் வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின் இளமறிவியல், 4ம் ஆண்டு மாணவியர், 12 பேர் கொண்ட குழுவினர், கால்நடை மருத்துவர் சீதாலட்சுமியுடன் இணைந்து, விவசாயிகளுக்கு குடற்குழு நீக்கம் குறித்து விளக்கமளித்தனர்.

