/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளி மாணவனை ஏமாற்றி திருமணம்: கல்லுாரி மாணவி மீது வழக்குப்பதிவு
/
பள்ளி மாணவனை ஏமாற்றி திருமணம்: கல்லுாரி மாணவி மீது வழக்குப்பதிவு
பள்ளி மாணவனை ஏமாற்றி திருமணம்: கல்லுாரி மாணவி மீது வழக்குப்பதிவு
பள்ளி மாணவனை ஏமாற்றி திருமணம்: கல்லுாரி மாணவி மீது வழக்குப்பதிவு
ADDED : அக் 28, 2025 01:58 AM
வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம், வந்த
வாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 16 வயது சிறுவன். அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். அருகே உள்ள மற்றொரு கிராமத்தை சேர்ந்த, 19 வயது அரசு கல்லுாரி மாணவி. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், வீட்டிற்கு தெரியாமல் திருமணம்
செய்து கொண்டனர்.
தற்போது மாணவி, 3 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து சமூக நலத்துறைக்கு சென்ற புகார் படி, வந்தவாசி வட்டார சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜீவா விசாரணை நடத்தினார். இதில், பள்ளி மாணவனை, கல்லுாரி மாணவி ரகசிய திருமணம் செய்ததும், அதில் மாணவி கர்ப்பமாக இருப்பதும் உறுதியானது. புகார் படி, வந்தவாசி மகளிர் போலீசார், மாணவனை ஏமாற்றி திருமணம் செய்த, கல்லுாரி மாணவி மீது, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.