/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரத்து அதிகரித்ததால் வெள்ளை பூசணி விலை குறைந்தது: விவசாயிகள் கவலை
/
வரத்து அதிகரித்ததால் வெள்ளை பூசணி விலை குறைந்தது: விவசாயிகள் கவலை
வரத்து அதிகரித்ததால் வெள்ளை பூசணி விலை குறைந்தது: விவசாயிகள் கவலை
வரத்து அதிகரித்ததால் வெள்ளை பூசணி விலை குறைந்தது: விவசாயிகள் கவலை
ADDED : நவ 26, 2025 01:58 AM
கரூர், வரத்து அதிகரிப்பு காரணமாக, வெள்ளை பூசணி விலை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.தமிழகத்தில், கடந்த ஆகஸ்ட் முதல், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மானாவாரி நிலங்களில் காய்களை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டனர். குறிப்பாக, சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் சுரைக்காய், புடலை, சிவப்பு பூசணி, வெள்ளை பூசணி காய்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டது. புயல் மற்றும் வடகிழக்கு பருவ
மழை காரணமாக, நவம்பர் துவக்கத்தில் இருந்து மழை பெய்து வருகிறது.
இதனால் பூசணி, புடலை மற்றும் சுரைக்காய்கள் அதிகளவில் விளைச்சல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகைக்காக சாகுபடி செய்யப்பட்ட வெள்ளை பூசணி மற்றும் சிவப்பு பூசணி காய்கள் எதிர்பார்த்ததை விட, அதிகளவில் உற்பத்தியானது. கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு நாள்தோறும் டன் கணக்கில் பூசணி வகைகள்
விற்பனைக்கு வருகிறது.
இதுகுறித்து, காய்கறி வியாபாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்காக வெள்ளை மற்றும் சிவப்பு பூசணியை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்வர். இதனால், மழை மற்றும் சீசன் காரணமாக விவசாயிகள், பூசணியை பயிரிட்டனர்.
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், ஒரு கிலோ வெள்ளை பூசணி, 30 ரூபாய் வரை விற்றது. தற்போது, 15 ரூபாய்க்கு விற்கிறது. ஒரு ஏக்கரில் வெள்ளை பூசணி சாகுபடி செய்ய, 5,000 ரூபாய் வரை செலவாகிறது. இதனால், பெரும் நஷ்டம்
ஏற்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

