/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டையில் கார்த்திகை விளக்கு உற்பத்தி பணி மும்முரம்
/
லாலாப்பேட்டையில் கார்த்திகை விளக்கு உற்பத்தி பணி மும்முரம்
லாலாப்பேட்டையில் கார்த்திகை விளக்கு உற்பத்தி பணி மும்முரம்
லாலாப்பேட்டையில் கார்த்திகை விளக்கு உற்பத்தி பணி மும்முரம்
ADDED : நவ 26, 2025 01:58 AM
கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு பகுதியில், கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, அகல் விளக்கு உற்பத்தி பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு பகுதியில், மண்பாண்டம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால், வீடுகளில் தீபம் ஏற்றி மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். தீபம் ஏற்றுவதற்கான அகல் விளக்கு
கள் லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு பகுதியில் நடந்து வருகிறது.
தரமான களிமண் கொண்டு விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மழை என்பதால் உற்பத்தி பணிகள் கடந்த சில நாட்களாக முடங்கியது. நேற்று லேசான வெயில் அடித்ததால், மீண்டும் விளக்கு உற்பத்தி பணி துவங்கியது. விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு கரூர், திருச்சி மற்றும் உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்கப்படுகிறது.