/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சி.பி.ஐ., அலுவலகத்துக்கு மீண்டும் வந்த த.வெ.க., மாவட்ட செயலர்
/
சி.பி.ஐ., அலுவலகத்துக்கு மீண்டும் வந்த த.வெ.க., மாவட்ட செயலர்
சி.பி.ஐ., அலுவலகத்துக்கு மீண்டும் வந்த த.வெ.க., மாவட்ட செயலர்
சி.பி.ஐ., அலுவலகத்துக்கு மீண்டும் வந்த த.வெ.க., மாவட்ட செயலர்
ADDED : நவ 26, 2025 02:23 AM
கரூர், கரூர் மேற்கு மாவட்ட, த.வெ.க., செயலர் நேற்று மாலை மீண்டும் சி.பி.ஐ., அலுவலகத்துக்கு சென்றார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பான வழக்கை, விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன், ஆகியோரிடம் நேற்று முன்தினம் காலை முதல், நேற்று மதியம் வரை விசாரணை நடத்தினர். பிறகு, அனைவரும் விசாரணை முடி ந்ததால் புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை, 4:30 மணிக்கு கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் மட்டும், சி.பி.ஐ., அலுவலகத்துக்கு சென்றார். அப்போது, கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசார கூட்டம் நடத்த, போலீசாரிடம் வழங்கிய அனுமதி கடிதம் குறித்த நகல்களை, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் வழங்கியதாக தெரிகிறது. பிறகு, 6:30 மணிக்கு சி.பி.ஐ., அலுவலகத்தில் இருந்து மதியழகன் புறப்பட்டு சென்றார்.

