/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டு நாய்கள் கடித்தாலும் ஆபத்துதான் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் வேண்டாம்'
/
வீட்டு நாய்கள் கடித்தாலும் ஆபத்துதான் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் வேண்டாம்'
வீட்டு நாய்கள் கடித்தாலும் ஆபத்துதான் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் வேண்டாம்'
வீட்டு நாய்கள் கடித்தாலும் ஆபத்துதான் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் வேண்டாம்'
ADDED : நவ 26, 2025 02:24 AM
கரூர், ந வீட்டு நாய்கள் கடித்தாலும் ஆபத்து இருப்பதால், தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்ட வேண்டாம் என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு இதுவரை, 5.25 லட்சத்திற்கும் அதிகமானோர் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளனர். இந்தாண்டில் ரேபிஸ் நோயால் 28 இறப்புகள் பதிவாகியுள்ளன. நாய் கடித்தால் காயத்தை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டாம். நாய் கடித்தவுடன், காயம்பட்ட இடத்தை, ஓடும் குழாய் தண்ணீரில் சோப்பு பயன்படுத்தி குறைந்தது, 15 நிமிடங்களுக்கு நன்கு கழுவ வேண்டும். இது மிகவும் முக்கியமான முதலுதவி.
4 தவணைகளில் தடுப்பூசி
காயத்தை சுத்தம் செய்த பிறகு, தாமதிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவரை அணுக வேண்டும். அங்கு, கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசியின் அனைத்து தவணைகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி 4 தவணைகளாக செலுத்தப்படும். மருத்துவர் பரிந்துரைத்த முதல் நாள் மற்றும் 3வது நாள், 7வது நாள், 28வது நாட்களில் தவறாமல் அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்த வேண்டும்.
மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது
காயம் ஆழமாகவோ அல்லது ரத்தக் கசிவுடனோ இருந்தால், மருத்து
வரின் ஆலோசனைப்படி ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் மருந்தை காயத்தை சுற்றியுள்ள பகுதியில் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு தவணை மட்டும் போட்டு கொண்டு சிகிச்சையை நிறுத்தக் கூடாது. முழுமையான தடுப்பூசி செலுத்துவதன் மூலமே, ரேபிஸ் நோயில் இருந்து, 100 சதவீதம் பாதுகாப்பு பெற முடியும். மேலும், ரேபிஸ் தடுப்பூசி முழுவதுமாக எடுத்து கொள்ளும் போதும், இறுதி தவணைக்கு பிறகு சில நாட்களுக்கும், மது அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில், மது அருந்துவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி, தடுப்பூசியின் செயல்திறனைக் குறைக்கக் கூடும். வீட்டு நாய்கள் கடித்தாலும் ஆபத்து உள்ளது, எனவே செல்லப்பிராணிகள் கடித்தாலும், தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்ட வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

