/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மானாவாரி நிலங்களில் உளுந்து சாகுபடி பணி
/
மானாவாரி நிலங்களில் உளுந்து சாகுபடி பணி
ADDED : நவ 26, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், நகிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மானாவாரி விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து செடிகள் நன்கு வளர்ந்துள்ளன.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரியபாளையம், பஞ்சப்பட்டி, வயலுார், கருப்பத்துார், பாப்பகாப்பட்டி, சிவாயம், சேங்கல் ஆகிய கிராமங்களில் உள்ள மானாவாரி விளை நிலங்களில், உளுந்து பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. மழைநீரால் மானாவாரி உளுந்து பயிர்களுக்கு தண்ணீர் கிடைப்பதால் செடிகள் பசுமையாக வளர்ந்து காய்கள் பிடித்து வருகிறது. மேலும் சில நட்களில், உளுந்து அறுவடை செய்யப்படும். மானாவாரி உளுந்து சாகுபடி மூலம், விவசாயிகளுக்கு ஒரளவு வருமானம் கிடைக்கிறது.

