sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சுக்காலியூர் - தண்ணீர்பந்தல் பாளையம் சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

/

சுக்காலியூர் - தண்ணீர்பந்தல் பாளையம் சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

சுக்காலியூர் - தண்ணீர்பந்தல் பாளையம் சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

சுக்காலியூர் - தண்ணீர்பந்தல் பாளையம் சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஆக 31, 2025 07:33 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் அருகே திருமாநிலையூரில், புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்-பட உள்ள நிலையில், சுக்காலியூர்- தண்ணீர் பந்தல்பாளையம் வரை, புதிய சாலை அமைக்கும் திட்டத்தை, நிறைவேற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தின் மைய பகுதியான கரூரில், ஜவுளி தொழில், கொசு-வலை உற்பத்தி, பஸ் பாடி கட்டும் தொழில், கல் குவாரி, மணல் குவாரி தொழில்களால் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்-றன. கன்னியாகுமரியில் இருந்து, வாரணாசியை இணைக்கும் சாலை, நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சி வழியாக, கோவையை இணைக்கும் சாலை, கரூர் வழியாக செல்கிறது.இந்த சாலைகள், ஏதாவது ஒரு பகுதியில் கடந்து செல்லாமல், கரூர் அருகே சுக்காலியூரில் சந்தித்து, நகர பகுதியான திருகாம்பு-லியூர் சென்று, அதன் பிறகு கோவை மற்றும் ஈரோடுக்கு பிரிந்து செல்லும் வகையில் உள்ளது. இதனால், சுக்காலியூரில் இருந்து திருகாம்புலியூர் வரை, பைபாஸ் சாலையில், 5 கி.மீ. துாரம் போக்-குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது, கரூர் நகர பகுதியிலும் சிக்-கலை ஏற்படுத்துகிறது.

இதை தவிர்க்க, சுக்காலியூரில் இருந்து கருப்பம்பாளையம், அப்-பிபாளையம், விஸ்வநாதபுரி வழியாக தாராபுரம் செல்லும் சாலை, தண்ணீர் பந்தல்பாளையம் (கோவை சாலை இணையும் இடம்) வரை புதிய சாலை அமைக்க கடந்த, 2013ல் திட்டமிடப்-பட்டது. இது கிடப்பில் உள்ளது. இந்நிலையில், கரூர் அருகே திருாமநிலையூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் விரைவில் பயன்பாட்-டுக்கு வரவுள்ளது. இதனால் திருச்சி, மதுரை மார்க்கங்களில் வரும் பஸ்கள், சுக்காலியூர் வழியாக திருமாநிலையூர் செல்ல வேண்டும். எனவே, சுக்காலியூர் - தண்ணீர் பந்தல்பாளையம் சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:

சுக்காலியூர் - தண்ணீர் பந்தல்பாளையம் வரை, புதிதாக சாலை அமைக்கப்படும் பட்சத்தில், திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சுக்காலியூர் வழியாக திருச்சி, மதுரையில் இருந்து கோவை செல்லும் பஸ்கள், கோவையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் பஸ்கள், கரூர் நகரம் திருகாம்புலியூர் செல்வதை தவிர்க்க முடியும். மேலும், 11 கி.மீ., துாரம் பயண நேரம், எரிபொருள் மிச்சமாகும். மேலும், விஸ்வநாதபுரி - அப்பி-பாளையம் இடையே அமராவதி ஆற்றில் பாலம் கட்டப்படு-வதால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். சேலம் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் மட்டும், திருகாம்புலியூர் வழியாக, திருமாநி-லையூர் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும். ஆனால் இந்த திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தீர்க்க, இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us