/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
த.வெ.க.,வில் இணைந்த அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,
/
த.வெ.க.,வில் இணைந்த அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,
ADDED : டிச 30, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: கடந்த, 1991ல் நடந்த சட்டசபை தேர்தலில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், மரியமுல் ஆசியா. அதன் பின், அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று, கோபி அலுவலகத்தில் செங்கோட்டையனை சந்தித்த மரியமுல் ஆசியா, தன்னையும், தன் குடும்பத்தாரையும், த.வெ.க.,வில் இணைத்துக்கொண்டார். அரவக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ.,-த.வெ.க.,வில் இணைந்துள்ளதால், அரவக்குறிச்சி பகுதியில் த.வெ.க., மேலும் வலுப்பெறும் என, அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

