/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேங்காய், கொப்பரை, எள் ரூ.74.65 லட்சத்துக்கு விற்பனை
/
தேங்காய், கொப்பரை, எள் ரூ.74.65 லட்சத்துக்கு விற்பனை
தேங்காய், கொப்பரை, எள் ரூ.74.65 லட்சத்துக்கு விற்பனை
தேங்காய், கொப்பரை, எள் ரூ.74.65 லட்சத்துக்கு விற்பனை
ADDED : டிச 30, 2025 05:27 AM
கரூர்: கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 9,859 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில், ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக, 35 ரூபாய், அதிகபட்ச விலையாக, 62.89 ரூபாய், சராசரி விலையாக, 57.19 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 2,982 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ஒரு லட்சத்து, 66,956 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய், 474 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சம், 163.89 ரூபாய், அதிகபட்சம், 199.99 ரூபாய், சராசரி, 198.99 ரூபாய், இரண்டாம் தரம், குறைந்தபட்சம், 124.99 ரூபாய், அதிகபட்சம், 188.17 ரூபாய், சராசரி, 161.89 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக, 22,556 கிலோ கொப்பரை தேங்காய், 37 லட்சத்து, 87,689 ரூபாய்க்கு விற்பனையானது. எள், 418 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், மஞ்சள் வெள்ளை ரகம், ஒரு கிலோ குறைந்தபட்சம், 93.09 ரூபாய், அதிகபட்சம், 119 ரூபாய், சராசரியாக, 117.81 ரூபாய் என, மொத்தம், 31,284 கிலோ எடையுள்ள எள், 35 லட்சத்து, 10,880 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 74 லட்சத்து, 65,525 ரூபாய்க்கு விற்பனையானது.

