/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் கசிவால் தீப்பிடித்து ஒரு ஏக்கர் கரும்பு சேதம்
/
மின் கசிவால் தீப்பிடித்து ஒரு ஏக்கர் கரும்பு சேதம்
மின் கசிவால் தீப்பிடித்து ஒரு ஏக்கர் கரும்பு சேதம்
மின் கசிவால் தீப்பிடித்து ஒரு ஏக்கர் கரும்பு சேதம்
ADDED : டிச 23, 2025 05:34 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த ஆலத்துார் கிராமத்தை சேர்ந்தவர் தனபால். இவருக்கு சொந்தமான நான்கரை ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, கரும்பு தோட்டத்தின் அருகே உள்ள மின்சார டிரான்ஸ்-பார்மரிலிருந்து, மின் கசிவு ஏற்பட்டு கரும்புக்-காடு தீப்பற்றி எரிந்தது.
பொதுமக்கள் டிப்பர் டிராக்டரில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீரை கொண்டு அணைக்க முயற்சித்தனர்.இந்நிலையில், குளித்தலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், ஒரு ஏக்கர் கரும்பு கருகி சேதம் அடைந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும் என, உரிமையாளர் தனபால் தெரிவித்தார். இது குறித்து வருவாய்த்துறை மற்றும் நங்கவரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சூதாடிய மூவர் கைது
கரூர், டிச. 23
கரூர் அருகே, பணம் வைத்து சூதாட்டம் ஆடிய-தாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், புலியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, வெள்ளாப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக், 32; மற்றொரு கார்த்திக், 27; மூவேந்தன், 35, என மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

