/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
3 லட்சம் ராக்கி கயிறுகள் கரூரில் இருந்து ராணுவ வீரர்களுக்கு அனுப்பி வைப்பு

ADDED : ஜூலை 25, 2025 01:25 AM
கரூர் :கரூரில் இருந்து, மூன்று லட்சம் ராக்கி கயிறுகள், இந்திய ராணுவ வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கரூர் வெண்ணைமலையில் உள்ள, பரணி பார்க் கல்வி குழுமம் சார்பில் கடந்த, 2017 முதல், இந்திய ராணுவ வீரர்களுக்கு, ராக்கி கயிறுகளை அனுப்பி வருகின்றனர். நடப்பாண்டு ஆப்ரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில், பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட, 18 தேசிய மொழிகளில், திருக்குறள் அச்சிடப்பட்டு தயாரிக்கப்பட்ட, 60 ஆயிரம் ராக்கி கயிறுகள், ஒரு லட்சத்து, 40 ஆயிரம் வீர் சக்ரா பெயர் பொறிக்கப்பட்ட ராக்கி கயிறுகள் உள்பட, மூன்று லட்சம் ராக்கி கயிறுகளை தயார் செய்தனர்.
அதை, புதுடில்லியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு, அனுப்பும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. ராணுவ கர்னல் நீரஜ் உன்னியால் கொடியைசைத்து ராக்கி கயிறுகளை அனுப்பி வைத்தார்.
அப்போது பள்ளி தாளாளர் மோகனரங்கன், செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி, முதன்மை முதல்வர் ராமசுப்பிர மணியம், பள்ளி முதல்வர்கள் சுதாதேவி, சேகர், சாந்தி, பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலாளர் பிரியா, தேசிய மாணவர் படை அலுவலர்கள் செல்வராசு, மனோஜ் குமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன், மாணவர்கள் பங்கேற்றனர்.