'ஹாலோவின்' கொண்டாடலாம்; மகா கும்பமேளா அர்த்தமற்றதா : லாலுவை வறுத்தெடுத்த பா.ஜ.,
'ஹாலோவின்' கொண்டாடலாம்; மகா கும்பமேளா அர்த்தமற்றதா : லாலுவை வறுத்தெடுத்த பா.ஜ.,
ADDED : நவ 02, 2025 11:20 PM

பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தன் பேத்திகளுடன் 'ஹாலோவின்' பண்டிகையை கொண்டாடியது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.
பீஹார் முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி., தலைவருமான லாலு, தன் பேரன், பேத்திகளுடன், 'ஹாலோவின்' பண்டிகையைக் கொண்டாடினார்.
அகால மரணமடைந்தவர்களை மகிழ்விப்பதற்காக, வித்தியாசமான உடை, அலங்காரங் களுடன் மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப் படுவதே, ஹாலோவின் பண்டிகை ஆகும்.
இந்நிலையில், தன் மகள் ரோஹினி ஆச்சார்யா, பேரன், பேத்திகளுடன் லாலு கொண்டாடும் வீடியோவை, அவருடைய ம கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பா.ஜ.,வின் விவசாயப் பிரிவு வெளியிட்ட அறிக்கை:
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பண்டிகையைக் கொண்டாடுவது லாலுவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், நம் நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பண்டிகைகளை கொண்டாடுவதுதான் அவருக்கு பிரச்னை.
மகா கும்பமேளா அர்த்தமற்றது என கூறியவர் லாலு. ஹிந்துக்களின் நம்பிக்கை, உணர்வுகளை புண்படுத்துவோரை பீஹார் மக்கள் வரும் சட்டசபை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

