/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உதவி ஆய்வாளர் பணிக்கான பயிற்சி வகுப்புகள் 17ல் துவக்கம்
/
உதவி ஆய்வாளர் பணிக்கான பயிற்சி வகுப்புகள் 17ல் துவக்கம்
உதவி ஆய்வாளர் பணிக்கான பயிற்சி வகுப்புகள் 17ல் துவக்கம்
உதவி ஆய்வாளர் பணிக்கான பயிற்சி வகுப்புகள் 17ல் துவக்கம்
ADDED : ஏப் 08, 2025 10:27 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, 1,299 காலி பணியிடங்களுக்கான உதவி ஆய்வாளர் பணிக்கான அறிவிப்பு இம்மாதம் 4ம் தேதி சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் வரும் 17ம் தேதி முதல் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விபரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 044 -27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

