/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
99 குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா வழங்கல்
/
99 குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா வழங்கல்
ADDED : டிச 24, 2025 06:48 AM

உத்திரமேரூர்: கரும்பாக்கத்தில் மனை பட்டா இல்லாத 99 குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது கரும்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில், நத்தம் உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த 80 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
ஆனால், இவர்களுக்கு இதுவரை வீட்டு மனை பட்டா கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். மனைபட்டா வழங்க கோரி கலெக்டர் உள்ளிட்ட பல துறை அதிகாரிகளிடத்தில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில், கரும்பாக்கத்தில் மனை பட்டா இல்லாத 99 குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அரும்புலியூர் ஊராட்சி தலைவர் வெங்கட் ராமன் தலைமையைில் நடந்த இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மற்றும் உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர்.
காஞ்சிபுரம் சப் - கலெக்டர் ஆஷிக்அலி, சாலவாக்கம் ஒன்றிய தி.மு.க., செயலர் குமார் மற்றும் உத்திரமேரூர் வருவாய் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

